ஆன்மிக களஞ்சியம்

அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவில்

Published On 2024-05-02 12:15 GMT   |   Update On 2024-05-02 12:15 GMT
  • வரதராச பெருமாள் சன்னதி சிறந்த கோபுர அமைப்புடன் சுற்றுப்பகுதியோடு விளங்குகிறது.
  • கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

கோவிலின் வடமேற்கு மூலையாகிய வாயு மூலையில் கோவில் கொண்டுள்ள வரதராச பெருமாள் சன்னதி சிறந்த கோபுர அமைப்புடன் சுற்றுப்பகுதியோடு விளங்குகிறது.

பண்டைய நடு நாட்டுத்தலமாக விளங்கிய காலத்தில் "அச்சுதக் களப்பாளர்" என்னும் சிற்றரசன் ஆட்சியில் தொண்டை மண்டலத்திற்கு உட்பட்ட கெடில நதிக்கரையில் கோவில் கொண்டுள்ள திருவகீந்திரபுரம் தேவநாத சாமி கோவிலின் கட்டளைக்கு உட்பட்ட அபிமான கோவிலாக இந்த கோவில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது.

ஞானாம்பிகை உடனுறை காளத்தீசுவரர் கோவில், "அரியும் அரனும் ஒருவரே" என்னும் உண்மையையும், "சைவமும் வைணவமும் சமயங்களால் பிரிந்தனவேயொழிய வழிபாட்டால் வேறானவையல்ல" என்ற உண்மையையும், "இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான்; எல்லா இடங்களிலும் அவன் ஒன்றாகவே காட்சியளிக்கின்றான்" என்ற உண்மையையும் உலகோருக்கு உணர்த்துகின்றது.

சிந்தித்தவருக்கு சிவனே சிவலிங்கம்.

சீதேவி, பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் சிறந்த வேலைப் பாடுகளுடன், புதுவண்ணம் தீட்டப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது.

கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News