search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பெரிய வீடியோ ஃபைல்களை விஎல்சி பிளேயர் மூலம் கம்ப்ரெஸ் செய்வது எப்படி?
    X

    பெரிய வீடியோ ஃபைல்களை விஎல்சி பிளேயர் மூலம் கம்ப்ரெஸ் செய்வது எப்படி?

    விண்டோஸ் கணினிகளில் அதிகம் பேர் பயன்படுத்தும் விஎல்சி மீடியா பிளேயர் கொண்டு பெரிய வீடியோ ஃபைல்களை கம்ப்ரெஸ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    விஎல்சி மீடியா பிளேயர் (VLC) கணினிகளில் பலரும் பயன்படுத்தும் மென்பொருளாக இருக்கின்றது. உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் இந்த மென்பொருள் கணினியை புதிதாய் வாங்குவோர் பலரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் ஒன்றாகவும் இருக்கின்றது. எளிய இன்டர்ஃபேஸ் மூலம் பல்வேறு பயன்பாடுகளை விஎல்சி பிளேயர் வழங்குகின்றது.

    இத்துடன் விஎல்சி பிளேயரை வீடியோ கன்வெர்ட்டர் போன்றும் பயன்படுத்த முடியும், வீடியோக்களை கன்வெர்ட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை டவுன்லோடு செய்வதை தவிர விஎல்சி பிளேயரையே பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ஃபார்மேட்டில் இருந்து வீடியோக்களை கன்வெர்ட் செய்வதை போன்று வீடியோக்களை கம்ப்ரெஸ் செய்யவும் முடியும்.

    விஎல்சி பிளேயர் மூலம் வீடியோக்களை கம்ப்ரெஸ் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..

    விஎல்சி டவுன்லோடு:

    முதலில் விஎல்சி மீடியா பிளேயரை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஏற்கனவை இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் நேரடியாக மெனுவில் இருக்கும் மீடியா ஆப்ஷன் செல்லலாம்.

    கன்வெர்ட் செய்யவும்:

    அடுத்து மெனுவின் கீழ் இருக்கும் கன்வெர்ட் / சேவ் (Convert/Save) ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்ததும் விண்டோஸ் பாப் அப் திரையில் தெரியும். இந்த ஆப்ஷனினை செயல்படுத்த ctrl+r பட்டனையும் பயன்படுத்தலாம்.

    தரவினை தேர்வு செய்யவும்:

    மூன்றாவதாக ஆட் (Add) பட்டனினை கிளிக் செய்து நீங்கள் கம்ப்ரெஸ் செய்ய வேண்டிய வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும். பின் கணினியில் இருந்து வீடியோவை தேர்வு செய்ததும் கன்வெர்ட் (Convert) ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

    வீடியோ கன்வெர்ட் செய்து முடிந்த பின் வீடியோவினை கணினியில் சேவ் செய்து கொள்ளலாம்.
    Next Story
    ×