search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்மார்ட்போனில் அழிந்து போன மெசேஞ்களை மீட்பது எப்படி?
    X

    ஸ்மார்ட்போனில் அழிந்து போன மெசேஞ்களை மீட்பது எப்படி?

    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் மெசேஞ்கள் தெரியாமல் அழிந்து விட்டதா, அவற்றை மீட்க சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அழிந்து போன குறுந்தகவல் (மெசேஞ்) அனைத்தும் முக்கியமானதாக இல்லையென்றாலும், சில குறுந்தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவ்வாறான குறுந்தகவல்கள் தெரியாமல் அழிந்து விட்டதா. கவலை வேண்டாம் அழிந்து போன குறுந்தகவல்களை மீட்க சில வழிமுறைகள் உள்ளது. 

    இதற்கு உங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி தேவைப்படும். வெவ்வேறு கணினிகளுக்கு ஏற்ப அழிந்து போன குறுந்தகவல்களை மீட்க சில செயலிகள் கிடைக்கின்றன. எனினும் இவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் மெமரியை ஸ்கேன் செய்து அழிந்து போன குறுந்தகவல்களை மீட்கும். 

    ஸ்மார்ட்போனின் டெவலப்பர் ஆப்ஷன்:

    முதலில் உங்களது ஸ்மார்ட்போனின் டெவலப்பர் ஆப்ஷனினை செயல்படுத்த வேண்டும். இதற்கு Settings >> About phone சென்று Build number ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதை Developer options has been enabled என்ற தகவல் வரும் வரை செய்ய வேண்டும். 

    டீபக்கிங் செய்ய வேண்டும்:

    அடுத்து  Developer options >> USB debugging ஆப்ஷன் செல்ல வேண்டும். 

    மென்பொருள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்:

    அடுத்து அழிந்த தகவல்களை மீட்க இலவசமாக கிடைக்கும் மென்பொருளை டவுன்லோடு செய்து கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கணினியில் இணைக்க வேண்டும். 

    ரிக்கவரி மென்பொருளை இயக்க வேண்டும்:

    பின் கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ரிக்கவரி மென்பொருளை இயக்கி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ஸ்கேன் செய்ய வேண்டும். உங்களது ஸ்மார்ட்போன் கண்டறியப்பட்டதும், அழிந்து போன குறுந்தகவல்களை தேடி கண்டறிய முடியும். 

    குறுந்தகவல்களை மீட்க வேண்டும்:

    அழிந்து போன குறுந்தகவல்களை கண்டறிந்த பின் அவற்றை தேர்வு செய்து ரிக்கவர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி மீட்கப்பட்ட குறுந்தகவல்களை கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.  
    Next Story
    ×