search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    3ஜி இணைப்பை வேகப்படுத்துவது எப்படி?
    X

    3ஜி இணைப்பை வேகப்படுத்துவது எப்படி?

    ஸ்மார்ட்போனில் 3ஜி இணைப்பினை பயன்படுத்துவோர் தங்களின் டேட்டா வேகத்தை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்த அத்தியாவசியமானதாக இண்டர்நெட் இணைப்பு இருக்கிறது. மொபைல் டேட்டாவை பொருத்த வரை 2ஜி, 3ஜியை கடந்து இன்று 4ஜி வரை தொழில்நுட்பங்களின் உதவியோடு இண்டர்நெட் வேகம் மொபைல் போன்களில் அதிகரித்து வருகிறது. எத்தனை தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் சில சமயங்களில் இண்டர்நெட் வேகம் குறைந்துவிடும்.  

    ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் எந்த தரவுகளையும் சர்ஃபிங் செய்யவோ டவுன்லோடு செய்யவோ முடியாது. ஆனால் 3ஜி கனெக்சனிலும் வேகத்தை அதிகரிக்க முடிந்தால் இண்டர்நெட் பயன்பாடு சிறப்பான ஒன்றாக இருக்கும். இங்கு உங்களின் 3ஜி கனெக்சனிலும் இண்டர்நெட் டேட்டா வேகத்தை அதிகரிக்க சில வழி முறைகள் இருக்கிறது.  

    சரியான பிரவுஸர்:

    ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு சரியான பிரவுஸராக கூகுள் க்ரோம் இருக்கிறது. டெஸ்க்டாப் கணினிகளை போன்றே ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் க்ரோம் பிரவுஸர் சிறப்பானதாக இருக்கின்றது. எனினும் கூகுள் க்ரோம் அதிக மெமரியை எடுத்து கொள்ளும். இதனால் ஒபேரா மேக்ஸ் அனைவருக்கும் ஏற்ற பிரவுஸராக இருக்கும். இதே பிரவுஸரின் குறைந்த மெமரி கொண்ட பதிப்பாக ஒபேரா மினி இருக்கும். 

    புகைப்படங்களை செயலிழக்க செய்தல்:

    உங்களது பிரவுஸரின் வேதக்தை அதிகரிக்க டெக்ஸ்ட்-ஒன்லி (text-only) மோட் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பிரவுஸரில் புகைப்படங்கள் இல்லாமல் வெறும் வார்த்தைகள் மட்டுமே தெரியும். எனினும் அனைத்து பிரவுஸர்களிலும் இந்த சேவை வழங்கப்படுவதில்லை. வெறும் வார்த்தைகளை மட்டும் லோடு செய்யும் போது பிரவுஸர்களில் வேகம் அதிகமாக இருக்கும். 

    கேச்சிக்களை அழிக்க வேண்டும்:

    கேச்சி உங்களது சாதனத்தின் வேகத்தை குறைத்து விடும். இது பழைய ஆண்ட்ராய்டு பதிப்புகளில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனை சரி செய்ய உங்களது போனின் Settings > Applications சென்று அழிக்க வேண்டிய செயலியை தேர்வு செய்து கேச்சிக்களை அழிக்கலாம். இதனை செய்ய கேச்சி கிளீனர் செயலிகளையும் பயன்படுத்தலாம்.  

    பெரிய செயலிகளை அழிக்க வேண்டும்:

    உங்களது ஸ்மார்ட்போனில் அதிக மெமரிக்களை எடுத்து கொள்ளும் செயலிகளை அழிக்க வேண்டும். இவை பேக்கிரவுண்டில் இயங்கி போனின் வேகத்தை குறைக்கும். இதனால் பெரிய செயலி மற்றும் விட்ஜெட்கள் உள்ளிட்டவற்றை அன்-இன்ஸ்டால் செய்தால் இண்டர்நெட் வேகம் அதிகரிக்கும். 
    Next Story
    ×