search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் கசிந்த எல்ஜி ஸ்மார்ட்வாட்ச் படங்கள்
    X

    இணையத்தில் கசிந்த எல்ஜி ஸ்மார்ட்வாட்ச் படங்கள்

    கூகுள் ஸ்மார்ட்வாட்ச்களை எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் குறித்த புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    கூகுள் ஸ்மார்ட்வாட்ச் குறித்த தகவல்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானதை தொடர்ந்து இவற்றின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் வாட்ச் ஸ்போர்ட் மற்றும் வாட்ச் ஸ்டைல் என அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

    வாட்ச் ஸ்போர்ட் உயர் ரக மாடலாக இருக்கும் என்றும் வாட்ச் ஸ்டைல் மாற்றக்கூடிய ஸ்டிராப்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. மேலே வழங்கப்பட்டுள்ள படங்களில் இடது புறம் இருப்பது வாட்ச் ஸ்போர்ட் மற்றும் வலது புறம் இருப்பது வாட்ச் ஸ்டைல் என்றும் கூறப்படுகின்றது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி வாட்ச் ஸ்போர்ட் 1.38 இன்ச் 480x480 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, IP68 சான்று 768 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் 430 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் டைட்டானியம் மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வை-பை, ஜிபிஎஸ், எல்டிஇ, என்எஃஎப்சி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இதய துடிப்பு சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு பே வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது. 

    இதே போல் எல்ஜி வாட்ச் ஸ்டைல் 1.2 இன்ச் 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே 512 எம்பி ரேம் 4ஜிபி இன்டெர்னல் மெமரி, IP67 சான்று வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் டைட்டானியம், சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகின்றது.   

    இணையத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படங்களில் வாட்ச் ஸ்போர்ட் மூன்று பட்டன்கள் கொண்டிருக்கும் என்றும் வாட்ச் ஸ்டைல் ஒரே ஒரு பட்டன் கொண்டிருக்கும் என்றும் இரண்டு வாட்ச்களும் மெட்டாலிக் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஸ்போர்ட்ஸ் பதிப்பில் ரப்பர் ஸ்டிராப் மற்றும் ஸ்டைல் பதிப்பில் லெதர் ஸ்டிராப் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
    Next Story
    ×