search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வித்தியாசமான அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி G6 ஸ்மார்ட்போன்
    X

    வித்தியாசமான அம்சங்களுடன் தயாராகும் எல்ஜி G6 ஸ்மார்ட்போன்

    எல்ஜி நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் G6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
    சியோல்: 

    பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை கொரிய இணையதளம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    அதன் படி எல்ஜி நிறுவனம் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன் G6 என அழைக்கப்படும் என்றும் இதில் 1440x2880 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட வித்தியாசமானது ஆகும். மேலும் சாம்சங் S7 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை விட சற்றே அதிகமான பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தவிர்க்க சிறிய பைப் ஒன்றை வழங்குகிறது. இதே போன்ற அம்சம் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த அம்சம் லேப்டாப் மற்றும் கணினிகள் அதிக சூடாவதை தவிர்க்க வழங்கப்படுவதை போன்றதாகும். 

    இறுதியாக எல்ஜி நிறுவனத்தின் G6 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தும் உதவியாள் சேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனமும் பிக்ஸ்பி என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. 
    Next Story
    ×