search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் OLEDக்களுக்கு மாற்றாக மைக்ரோ-எல்இடி பயன்படுத்தும் ஆப்பிள்?
    X

    சாம்சங் OLEDக்களுக்கு மாற்றாக மைக்ரோ-எல்இடி பயன்படுத்தும் ஆப்பிள்?

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஆப்பிள் வாட்ச் 3 மற்றும் ஐபோன் சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்பிள் சாதனங்களில் OLEDக்களுக்கு பதிலாக மைக்ரோ-எல்இடிக்களை பயன்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் வாட்ச் 3 மற்றும் ஐபோன்களில் மைக்ரோ-எல்இடி பயன்படுத்தும் முடிவு ஆப்பிள் நிறுவனத்திற்கு OLEDக்களை வழங்கி வரும் சாம்சங்கிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றே கூற வேண்டும். 

    ஆப்பிள் 2014-இல் கைப்பற்றிய லக்ஸ்வியூ (LuxVue) நிறுவனம் புதிய மைக்ரோ-எல்இடிக்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானது. லக்ஸ்வியூ மற்றும் மைக்ரோ-எல்இடி சார்ந்த காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் பெற்றிருந்தது. இதை கொண்டு இன்ஃப்ராரெட் டயோடுகளை கண்டறிந்து கைரேகைகளை டிஸ்ப்ளேவிலேயே இயக்கும் திறன் வழங்க முடியும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    ஆப்பிளின் இந்த முடிவு ஏற்கனவே OLED வழங்கி வரும் சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களை பாதிப்பதோடு ஆப்பிள், தனக்கான ரேம் மற்றும் கேமராவையும் தானே உற்பத்தி செய்து கொள்ளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 



    ஐபோன்களுக்கு தேவையான மெமரி சிப்களை தயாரிக்க ஆப்பிள் பல கோடி அமெரிக்க டாலர்களை முதலிடூ செய்யலாம் என கூறப்படுகின்றது. இதற்கென ஆப்பிள் ஜப்பானைவ சேர்ந்த டொஷிபா நிறுவனத்தில் அதிக பங்குகளை ஆப்பிள் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த காலங்களில் சாம்சங் நிறுவனம் ஆப்பிளிற்கு ரேம்களை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. 

    முன்னதாக 700 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் டிஸ்ப்ளே-பேனல் தயாரிக்கும் ஆலையை அமெரிக்காவில் கட்டமைக்க ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடயிருப்பதாக ஃபாக்ஸ்கான் தெரிவித்திருந்தது. இதில் டிவி ஸ்கிரீன் மற்றும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களை தயாரிப்பதன் மூலம் 30,000 முதல் 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் ஃபாக்ஸ்கான் தெரிவித்திருந்தது.
    Next Story
    ×