search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மேம்படுத்தப்பட்ட கார்டனா ஆப்: இது ஐபோன் பயனர்களுக்கு மட்டும் தான்
    X

    மேம்படுத்தப்பட்ட கார்டனா ஆப்: இது ஐபோன் பயனர்களுக்கு மட்டும் தான்

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டிஜிட்டல் அசிஸ்டண்ட் செயலியை மேம்படுத்தியுள்ளது. எனினும் இந்த அப்டேட் ஐபோன் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது டிஜிட்டல் அசிஸ்டண்ட் செயலியான கார்டனாவிற்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. ஐபோன் பயன்படுத்துவோருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் மூலம் யூஸர் இன்டர்ஃபேஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

    கார்டனா செயலியை கொண்டு மின்னஞ்சல்களை அனுப்புவது, நிகழ்வுகளை திட்டமிடுவது, இண்டர்நெட் சர்ச் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். விண்டோஸ் இயங்குதளங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த கார்டனா சமீபத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் வழங்கப்பட்டது. 

    ஐபோனில் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ள புதிய அப்டேட்டில் யூஸர் இன்டர்பேஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் காலிங் வசதி, குறுந்தகவல், நினைவூட்டல் என பல்வேறு அம்சங்களும் புதிய வடிவமைப்பை கொண்டுள்ளன. மேலும் முன்பை விட சிறப்பான பதில்களை வழங்கும் படி கார்டனா வடிவமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×