search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அடுத்த வாரம் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்: அதிரடி அறிவிப்பு
    X

    அடுத்த வாரம் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்: அதிரடி அறிவிப்பு

    அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறும் சர்வதேச விழாவில் புதிய ஹானர் ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.
    சென்சென்:

    சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அடுத்த வாரம் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. பல்வேறு பிரபல நிறுவனங்களின் புதிய சாதனங்கள் அறிமுகமாக இருக்கும் இவ்விழாவில் ஹானர் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதை உறுதி செய்துள்ளது. அதன் படி ஜனவரி 3, 2017 இல் புதிய ஹானர் ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. 

    இது குறித்த புகைப்படங்களை ஹானர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. ஹானர் நிறுவனம் பதிவு செய்துள்ள ட்வீட் மூலம் புதிய ஸ்மார்ட்போனில் ஹானர் இரட்டை கேமரா அம்சங்களை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 8 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. 

    டூயல் கேமரா அம்சம் வழங்குவது ஹானர் நிறுவனத்தின் அடையாளம் போன்றே மாறியுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் ஹானர் மேஜிக் என்ற சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனிலும் டூயல் கேமரா, அழகிய வடிவமைப்பு மற்றும் டூயல் வளைந்த டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போனிலும் ஹானர் மேஜிக், போன்ற சாயல் இருக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    ஹானர் மேற்கொண்டுள்ள ட்வீட்களின் படி பார்க்கும் போது புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் EMUI5 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம். இதனால் புதிய ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட புதிய இன்டர்ஃபேஸ், நௌக்கட் அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. 

    ஹானர் குளோபல் பகிர்ந்து கொண்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் குறைந்த வெளிச்சங்களிலும் அழகிய புகைப்படங்களை வழங்கும் கேமரா இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹானர் 5X மற்றும் ஹானர் 8 போன்றே புதிய ஹானர் ஸ்மார்ட்போன்களும் அன்லாக் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×