search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி On Nxt (2017): முழு தகவல்கள்
    X

    64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி On Nxt (2017): முழு தகவல்கள்

    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட On Nxt ஸ்மார்ட்போனின் 2017 பதிப்பு பிளிப்கார்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. 64 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் கேலக்ஸி On Nxt ஸ்மார்ட்போனினை வெளியிட்டு பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்தது. சாம்சங் கேலக்ஸி On Nxt ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டது. 

    இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி On Nxt 2017 ஸ்மார்ட்போனில் 64ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கேலக்ஸி On Nxt 32ஜிபி மாடல் ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் 64 ஜிபி On Nxt 2017 மாடலின் விலை ரூ.1000 கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் வரை இந்த மாடலின் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த மாடல் கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி On Nxt மாடலில் 5.5 இன்ச் ஃபுல்-எச்டி டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளாஷ் மற்றும் ஃபுல்-எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.1, வை-பை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 32ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் நானோ-சிம் கார்டு ஸ்லாட் மற்றும் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
    Next Story
    ×