search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா P1 ஸ்மார்ட்போன்: புதிய வீடியோ வெளியானது
    X

    நோக்கியா P1 ஸ்மார்ட்போன்: புதிய வீடியோ வெளியானது

    நோக்கியா நிறுவனத்தின் புதிய P1 ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
    எல்சிங்கி:

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2017-ல் நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட இருக்கிறது. 

    முதலில் வெளியிடப்பட்ட நோக்கியா 6 சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போன் உலக சந்கையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

    முன்னதாக நோக்கியா P1 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை நோக்கியா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இது சாதாரண வடிவமைப்பு தான் என்றும் இது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில் நோக்கியா P1 இப்படி தான் காட்சியளிக்கும் என்ற வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களை வைத்து இந்த கான்செப்ட் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி நோக்கியா P1 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 22.3 எம்பி பிரைமரி கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

    நோக்கியா  P1 இணையத்தில் வெளியான வீடியோ: 

    Next Story
    ×