search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்: முழு தகவல்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்: முழு தகவல்கள்

    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இதில் வழங்கப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை இங்கு பார்ப்போம்.
    பீஜிங்: 

    லெனோவோவின் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. அடுத்த மாதம் நடைபற இருக்கும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படும் இந்த ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.   

    இம்முறை கசிந்திருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் முன்பக்கம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் நிலையில் கேமராவின் கீழ் மோட்டோரோலாவின் சின்னம் இடம் பெறலாம் என கூறப்படுகின்றது.

    இத்துடன் புதிய மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. மெமரியை பொருத்த வரை 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் மெமரியும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளமும் வழங்கப்படலாம். 

    மேலும் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனினை விட குறைந்தளவு சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    Next Story
    ×