search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

    லாவா நிறுவனம் தனது புதிய 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லாவா நிறுவனம் X41+ எனும் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4ஜி வோல்ட்இ திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கன் உள்ளன. 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. புதிய லாவா X41+ ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக லாவா நிறுவனம் A55 எனும் ஸ்மார்ட்போனினை வெளியிட்டது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டது. இத்துடன் 5 எம்பி பிரைமரி கேமராவும், ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் 1500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டது.
    Next Story
    ×