search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசிஸ்டண்ட் சேவை கொண்ட கூகுள்-அல்லாத முதல் ஸ்மார்ட்போன்
    X

    அசிஸ்டண்ட் சேவை கொண்ட கூகுள்-அல்லாத முதல் ஸ்மார்ட்போன்

    அசிஸ்டண்ட் சேவை கொண்டு வெளியாகும், கூகுள் அல்லாத மற்ற நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சியோல்:

    எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக கூறப்பட்டு வரும் எல்ஜி G6 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வந்தது. இதனை தொடர்ந்து எல்ஜி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் அசிஸ்டண்ட் சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இது உண்மையாகும் பட்சத்தில் அசிஸ்டண்ட் கொண்ட கூகுள் அல்லாத மற்ற நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    கூகுள் அசிஸ்டண்ட் சேவை கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அமைந்தது. இதனை தொடர்ந்து மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் அசிஸ்டண்ட் சேவை வழங்க கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது. பெரும் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் அசிஸ்டண்ட் சேவை வழங்குவது கூகுள் நிறுவனத்தின் அசிஸ்டண்ட் தொழில்நுட்பத்திற்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும். 

    தற்சமயம் வரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், கூகுள் அசிஸ்டண்ட் இல்லாமல் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா தொழில்நுட்பம் வழங்குவது குறித்தும் எல்ஜி சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. எதுவாயினும் தற்சமயம் வரை புதிய எல்ஜி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் அசிஸ்டண்ட் தொழில்நுட்பம் இடம்பெறுவது மட்டும் கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி G6 ஸ்மார்ட்போனில் 1440x2880 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட வித்தியாசமானது ஆகும். மேலும் சாம்சங் S7 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை விட சற்றே அதிகமான பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் அதிக சூடாவதை தவிர்க்க சிறிய பைப் ஒன்றை வழங்குகிறது. இதே போன்ற அம்சம் வழங்கப்படுவது குறித்து ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்த அம்சம் லேப்டாப் மற்றும் கணினிகள் அதிக சூடாவதை தவிர்க்க வழங்கப்படுவதை போன்றதாகும்.
    Next Story
    ×