search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.15,000 விலையில் 3-5 நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள்
    X

    ரூ.15,000 விலையில் 3-5 நாள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள்

    இன்றைய ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது அவற்றின் பேட்டரி பேக்கப் எனலாம். இங்கு நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பற்றி பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன்களின் தீர்க்க முடியாத பிரச்சனையாக அவற்றின் பேட்டரி பேக்கப் இருக்கின்றது. இதனை சமாளிக்க தொழில்நுட்ப சந்தையில் பவர் பேங்க் சாதனங்கள் கிடைக்கின்றது. இதோடு பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரிகளை வழங்குகின்றன. ஆனாலும் இவை அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுவதில்லை. 

    இங்கு ரூ.15,000 விலையில் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பார்ப்போம். 

    சியோமி ரெட்மி நோட் 4:

    4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    லெனோவோ K6 நோட்:

    இந்தியாவில் சமீபத்தில் வெளியான லெனோவோ K6 நோட் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. 

    சியோமி ரெட்மி 3s பிரைம்:

    ரூ.8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அனைத்து பிளாஷ் விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

    அசுஸ் சென்ஃபோன் 3 மேக்ஸ்:

    4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சென்ஃபோன் 3 மேக்ஸ் இந்தியாவில் ரூ.12,600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

    லெனோவோ ஃபேப் 2 பிளஸ்:

    இந்தியாவில் ரூ.14,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபேப் 2 பிளஸ் 4050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. 
    Next Story
    ×