search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மைக்ரோமேக்ஸ் விடியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
    X

    மைக்ரோமேக்ஸ் விடியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விடியோ (Vdeo) மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:  

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விடியோ 3 மற்றும் விடியோ 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் விலை மற்றும் விற்பனை தேதி உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்படவில்லை. முன்னதாக மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட விடியோ 1 மற்றும் விடியோ 2 ஸ்மார்ட்போன்களை போல் புதிய ஸ்மார்ட்போன்களிலும் 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களில் கூகுள் டூயோ ஆப் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    சிறப்பம்சங்களை பொருத்த வரை விடியோ 4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமராவும் 2 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

    மெமரியை பொருத்த வரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் வை-பை, GPS மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது. 

    விடியோ 3 ஸ்மார்ட்போனை பொருத்த வரை 5.0 இன்ச் 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, 1.0 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் A-53 பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி பிரைமரி கேமராவும், 2 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, டூயல் சிம் ஸ்லாட், வை-பை, GPS மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×