search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா 6 அறிமுகம் செய்யப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்
    X

    நோக்கியா 6 அறிமுகம் செய்யப்பட்டது: விலை மற்றும் முழு தகவல்கள்

    நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா 6 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
    பீஜிங்:

    உலக தொழில்நுட்ப சந்கதையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எச்எம்டி குளோபல் நிறுவனம் தயாரித்து வெளியிடும் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6 என பெயரிடப்பட்டுள்ளது. 

    எச்எம்டி நிறுவனத்தின் இணையதளம் மூலம் எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 6, ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

    நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 

    6000 சீரிஸ் அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

    அதிக சத்தம் வழங்க ஏதுவாக டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ள நோக்கியா 6 டூயல் ஆம்ப்ளிஃபையர் கொண்டுள்ளது. எதிர்பாராத விதமாக நோக்கியா 6 சீன சந்தையில் மட்டும் வெளியிடப்படுவதாகவும் இதன் விலை JD.com தளத்தில் CNY 1699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×