search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் கசிந்த நோக்கியா பட்ஜெட் ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் கசிந்த நோக்கியா பட்ஜெட் ஸ்மார்ட்போன்

    நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதில் வெளியான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    பீஜிங்:

    சீனாவின் வெய்போ இணையதளத்தில் சமீபத்தில் காணப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன் (TA-1000) தற்சமயம் நோக்கியா E1 என அழைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.  

    அதன் படி நோக்கியா E1 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச், 5.3 இன்ச் 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 2GB ரேம், 16GB இன்டர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.   

    இத்துடன் நோக்கியா E1 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது. 

    மேலும் நோக்கியா சார்ந்து வெளியாகியுள்ள மற்ற தகவல்களில் மலேசியாவில் விநியோகம் செய்யும் அவாக்ஸ் (Avaxx) நிறுவனம், இந்த ஆண்டில் மொத்தம் 6-7 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. இவற்றில் குறைந்த விலை முதல் உயர் ரகம் வரை அனைவரும் வாங்கக் கூடிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த ஆண்டு வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் திரை அளவுகள் 5.0 இன்ச் முதல் 5.7 இன்ச வரை இருக்கும் என்றும் இவை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு பின்பு மட்டுமே வெளியாகும் என கூறப்படுகின்றது. இவற்றை எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

    முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியாவின் D1C எனும் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×