search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி S8 லீக்ஸ்: புதிய தகவல்கள் கசிந்தன
    X

    சாம்சங் கேலக்ஸி S8 லீக்ஸ்: புதிய தகவல்கள் கசிந்தன

    சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் தெரியவந்திருக்கும் தகவல்களை இங்கு பார்ப்போம்.
    சீயோல்:

    சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. 

    தற்சமயம் கசிந்துள்ள புகைப்படத்தில் கேலக்ஸி S8 சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் போனாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. புதிய S8 ஸ்மார்ட்போனில் டூயல்-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. புதிய புகைப்படத்திலும் டூயல்-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பதால் சாம்சங் நிறுவனம் இரண்டு ஃபிளாக்‌ஷிப் போன்களை இரு வித டிஸ்ப்ளே அளவுகளில் வெளியிடும் என கூறப்படுகிறது. 

    புதிதாக கசிந்துள்ள புகைப்படங்களில் சீன எழுத்துக்கள் காணப்படுவதால், சாம்சங் நிறுவனம் தயாரித்து வரும் ப்ரோட்டோடைப் சாதனமாக இது இருக்கலாம். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் ஹோம் பட்டனை நீக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என்றும் செல்ஃபி கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம் வழங்கப்படலாம் என தெரிவித்தது. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 8GB ரேம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி S8 இல்லாமல் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றையும் சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி S8 பிளஸ் என அழைக்கப்படும் என்றும் இதில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்ஸ்டர்னல் S-பென் ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனத்தின் பிரெஷர்-சென்சிட்டிவ் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 835 குவால்காம் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலில் கேலக்ஸி S8 ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×