search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இண்டர்நெட்டில் லீக் ஆன சோனி எக்ஸ்பீரியா X: முழு தகவல்கள்
    X

    இண்டர்நெட்டில் லீக் ஆன சோனி எக்ஸ்பீரியா X: முழு தகவல்கள்

    சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
    டோக்கியோ:

    கடந்த ஆண்டு நடைபெற்ற IFA விழாவில் எக்ஸ்பீரியா XZ மற்றும் எக்ஸ்பீரியா X காம்பேக்ட் ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனம் அறிமுகம் செய்தது. இதே போன்று இந்த ஆண்டும் சோனி நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதே போன்று தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா X ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா XZ மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் கசிந்துள்ளது.  

    வெளியாகி இருக்கும் புகைப்படம் கொண்டு அனைத்து சிறப்பம்சங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு நிறம் கொண்டு பழைய எக்ஸ்பீரியா XZ போனில் வழங்கப்பட்டதை போன்ற டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. 

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் பெசல்ஸ் கொண்ட டிஸ்ப்ளே, 5.5 இன்ச் திரை மற்றும் சிறிய செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரகசியமாக கசிந்துள்ள தகவல்கள் குறித்து எவ்வித அறிவிப்பையும் சோனி வழங்கவில்லை. 

    கடந்த ஆண்டு சோனி ஸ்மார்ட்போன்கள் IFA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டும் சோனி ஸ்மார்ட்போன்கள் IFA விழாவிலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×