search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    லீஇகோ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    லீஇகோ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லீஇகோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லீஇகோ 3GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரி கொண்ட லீ2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது.  

    சிறப்பம்சங்களை பொருத்த வரை டூயல்-சிம் கொண்ட லீஇகோ லீ2 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 64-பிட் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் மற்றும் 3GB ரேம், மற்றும் 64GB இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 16எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமராவும் 4G, எல்டிஇ, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், GPS மற்றும் மைக்ரோ யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    சமீபத்தில் லீஇகோ நிறுவனம் லீ ப்ரோ 3 எனும் ஸ்மார்ட்போனினை சீனாவில் வெளியிட்டது. 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எச்டி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது. 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 4GB / 6GB ரேம் மற்றும் 32GB / 64GB இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.  

    டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 4G, வோல்ட்இ, 3G, வைபை, ப்ளூடூத், GPS மற்றும் யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 4070 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    Next Story
    ×