search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி A (2017): சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்
    X

    சாம்சங் கேலக்ஸி A (2017): சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

    சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் புதிய கேலக்ஸி A (2017) ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதையொட்டி சிறப்பம்சங்கள் முன்னதாகவே கசிந்துள்ளன.
    கோலாலம்பூர்:

    சாம்சங் கேலக்ஸி A (2017) ஸ்மார்ட்போன் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.  கேலக்ஸி A சீரிஸ் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை கொண்டிருக்கும் - கேலக்ஸி A3, கேலக்ஸி A5 மற்றும் கேலக்ஸி A7. சமீபத்தில் கசிந்த யூஸர் மேனுவல் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

    மூன்று ஸ்மார்ட்போன்களிலும் IP68 சான்று கொண்டிருக்கும் என்பதால் இவை வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்கள் 30 நிமிடங்கள் 1.5 அடி ஆழத்தில் நீரில் இருந்தாலும் எதுவும் ஆகாது. இந்த ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர் மற்றும் என்எஃப்சி உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட இருக்கிறது. 

    சாம்சங் கேலக்ஸி A7 (2017) சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.7 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் எக்சைனோஸ் 7880 பிராசஸர், 3GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் மெமரி, 16 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி A5 (2017) சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 7880 பிராசஸர், 2GB ரேம் மற்றும் 32GB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி, 16 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி A3 (2017) சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச் 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் எச்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×