search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் வெளியாக தயாராகி வரும் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் வெளியாக தயாராகி வரும் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட இருப்பதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5 என அழைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    பீஜிங்:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் இந்த ஆண்டு வெளியிட்ட ஸ்மார்ட்போன்களில் அதிகளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதோடு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    அந்த வகையில் ஒன்பிளஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5 என அழைக்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் ப்ரூஃப் அம்சம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 3 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து அந்நிறுவனம் நேரடியாக ஒன்பிளஸ் 5 வெளியிடுவது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தை பொருத்த வரை நான்கு ராசியில்லாத எண் என்பதால் நேரடியாக ஒன்பிளஸ் 5 வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 835 மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 29,000 ரூபாய்க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கருப்பு, கோல்டு, வெள்ளை, நீலம் மற்றும் செராமிக் உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. 

    இத்துடன் 5.5 இன்ச் குவாட் எச்டி AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் 64GB இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைரேகை ஸ்கேனர், குவிக் சார்ஜிங் தொழில்நுட்பம்,  டி-டச் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×