search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புதிய பிராசஸர்களுடன் தயாராகும் மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ?
    X

    புதிய பிராசஸர்களுடன் தயாராகும் மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ?

    ஆப்பிள் நிறுவனம் முன்னதாக வெளியிட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்கள் புதிய வகை பிராசஸர் மூலம் மேம்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மேக்புக் ப்ரோ மாடல்களில் ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் 'கேபி லேக்' பிராசஸர் கொண்டு மேம்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கௌ இது குறித்து தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளார். 

    மேம்படுத்தப்பட்ட பிராசஸர்களை தவிர 15 இன்ச் திரை கொண்ட மேக்புக் ப்ரோ 32ஜிபி ரேம் வசதி பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 12 இன்ச் மேக்புக் கேபி லேக் பிராசஸர்களை பெறும் என்றும் இவற்றின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு வாக்கில் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்துடன் இந்த லேப்டாப்பில் 16ஜிபி ரேம் கூடுதலாக சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    கேபி லேக் பிராசஸர்கள் கொண்டுள்ள 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் மாடல்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ 32ஜிபி ரேம் கொண்ட மாடல் தனியே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் பில் ஸ்கில்லர் 16ஜிபி ரேம் கொண்ட லேப்டாப் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவி்த்தார். 

    தற்சமயம் வரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தயாரிப்பு பணிகளின் தாமதம் காரணமாக மேக்புக் ப்ரோ விநியோகம் குறைந்திருக்கிறது, விரைவில் இவற்றின் விற்பனை எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதோடு டச் பார் வசதி கொண்ட மேக்புக் ப்ரோ விற்பனை மந்தமாக இருப்பதால் இதன் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×