search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் புதிய குரோம்புக் லேப்டாப்கள் அறிமுகம்
    X

    சாம்சங் புதிய குரோம்புக் லேப்டாப்கள் அறிமுகம்

    சாம்சங் நிறுவனம் புதிய குரோம்புக் லேப்டாப்களை நடைபெற்று வரும் CES 2017 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லேப்டாப்கள் சார்ந்த அம்சங்களை இங்கு பார்ப்போம்..
    சான்பிரான்சிஸ்கோ:

    தென்கொரிய மின்சாதன நிறுவனமான சாம்சங் குரோம்புக் ப்ரோ மற்றும் குரோம்புக் பிளஸ் லேப்டாப்களை லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய குரோம்புக் லேப்டாப்களில் சாம்சங் 360 டிகிரி சுழலும் தொடுதிரை, பில்ட்-இன் டிஜிட்டல் பேனா, குறைந்த எடை மெட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.    

    இரண்டு குரோம்புக்களிலும் 12.3 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே, 2400x1600 பிக்சல் ரெசல்யூஷன், 4GB ரேம், 32GB இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 2 யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4K வீடியோ அவுட்புட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், வைபை மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 8 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரு சாதனங்களுக்கும் இடையே வெவ்வேறு பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் குரோம்புக் பிளஸ் OP1 ஹெக்சா-கோர் பிராசஸர், குரோம்புக் ப்ரோ இன்டெல் கோர் M3 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு குரோம்புக்களும் மெட்டல் பாடி மற்றும் கூகுள் கீப் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

    சாம்சங் புதிய சாதனங்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இவற்றின் விற்பனை பிப்ரவரி மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென்கொரிய நிறுவனம் குவான்டம் டாட் வளைந்த மானிட்டர் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த மானிட்டர் 27 இன்ச் மற்றும் 31.5 இன்ச் அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×