search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான்: பார்ட்டிகளில் மது அருந்தி விட்டு நடனமாடிய 230 இளைஞர்கள், இளம் பெண்கள் கைது
    X

    ஈரான்: பார்ட்டிகளில் மது அருந்தி விட்டு நடனமாடிய 230 இளைஞர்கள், இளம் பெண்கள் கைது

    ஈரானில் இஸ்லாம் சட்டத்திற்கு எதிராக விருந்து நிகழ்ச்சியில் மது அருந்தி விட்டு நடனமாடிய 230 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    டெக்ரான்:

    ஈரானில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் மது அருந்திவிட்டு நடனம் ஆடுவது குற்றமாக கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிந்திருக்க வேண்டும்.



    இந்நிலையில் தலைநகர் டெக்ரானின் புறநகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு தோட்டத்தில் நடந்த விருந்தில் மது பரிமாறப்பட்டது. அதில் கலந்து கொண்டு நடனம் ஆடிய 140 இளைஞர்களும், இளம் பெண்களும் கைது செய்யப்பட்டனர். அதே போன்று மற்றொரு இடத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் மது குடித்து விட்டு நடனம் ஆடிய 90 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சம்பவங்களிலும் 230 பேர் கைதாகியுள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடிய இரண்டு பாடகர்களும் கைது செய்யப்பட்டனர். விருந்தில் பரிமாறப்பட்ட மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×