search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரை குடிக்கும் மருந்துகள் மூலம் 106 நோயாளிகளை கொன்ற நர்சு
    X

    உயிரை குடிக்கும் மருந்துகள் மூலம் 106 நோயாளிகளை கொன்ற நர்சு

    ஜெர்மனியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக உயிர் பறிக்கும் மருந்து மூலம் 106 நோயாளிகளை நர்சு கொலை செய்துள்ளார்.
    பெர்லின்:

    ஜெர்மனியில் தலைநகர் பெர்லின் அருகேயுள்ள பிரெமென் நகரை சேர்ந்தவர் நியல்ஸ் ஹோஜெல் (41). இவர் டெல்மென்கோர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணிபுரிந்தார்.

    அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்தார். அப்போது அங்கிருந்த நோயாளிகளுக்கு உயிரை பறிக்கும் ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.

    இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த விவரம் தெரிய வந்ததும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 2015-ம் ஆண்டு நியல்ஸ் ஹோஜெலை கைது செய்தனர்.



    உயிர் பறிக்கும் மருந்து மூலம் 2 பேரை கொலை செய்ததாகவும், 4 பேரை கொலை செய்ய முயன்றதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    அப்போது இவர் 100-க்கும் மேற்பட்டோரை இது போன்று கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து இது போன்று இறந்தவர்களின் புதைக்கப்பட்ட பிணங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதில் அவர் 106 பேரை கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட சலிப்பு காரணமாக உயிரிழக்கும் மருந்துகளை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த விசாரணை தொடரும் பட்சத்தில் கொலை எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×