search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டலோனியா அரசை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் அரசு முடிவு
    X

    கட்டலோனியா அரசை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் அரசு முடிவு

    ஸ்பெயினின் தன்னாட்சி மாகாணங்களில் ஒன்றான கட்டலோனியாவின் பிரிவினைவாத அரசை கலைக்க அந்நாட்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

    மாட்ரிட்:

    ஸ்பெயினின் தன்னாட்சி மாகாணங்களில் ஒன்றான கட்டலோனியாவின் பிரிவினைவாத அரசை கலைக்க அந்நாட்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மாகாண அரசை கலைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நடைமுறை நிறைவேற ஒருவார காலமாகும் என கருதப்படுகிறது. 

    ஆளுங்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை உள்ளதால் தீர்மானம் எளிதாக நிறைவேறும் என கூறப்படுகிறது. கட்டலோனியா அரசை சஸ்பென்ட் செய்துவிட்டு அங்கு மறுதேர்தல் நடத்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் சில தினங்களில் ஸ்பெயின் செனட் சபையில் நிறைவேற்றப்படும். கட்டலோனியா சுதந்தரத்திற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி சுமார் மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இத்திட்டங்கள் வந்துள்ளன. 
    உச்சநீதிமன்றம் அவ்வாக்கெடுப்பு சட்டவிரோதமானது, அரசியலமைப்பை மீறியது என தீர்ப்பளித்துள்ளது என்றார். எனவே அங்கு நேரடி ஆட்சியமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றார்.

    ஸ்பெயினின் இந்த அறிவிப்பு கட்டலோனியா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் மத்திய அரசு, நீதிமன்றங்கள், மன்னரின் வேண்டுகோள் ஆகியவற்றையும் மீறி பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. தனிநாடு கோரிக்கைக்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கட்டலோனியா தலைவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×