search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்
    X

    உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்

    உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான பட்டைத் தீட்டப்படாத வைரம் 53 டாலருக்கு இங்கிலாந்தின் பிரபல டயமண்டஸ் நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டது.
    நியூயார்க்:

    உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம்.

    ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது.

    இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுத்தனர். இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று பெயரிட்டிருந்தனர்.

    இதுகுறித்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லாரன்ஸ் கிராஃப் கூறுகையில், பழமையான இந்த வைரமானது மிகவும் பாதுகாப்பான முறையில் வெட்டி பட்டைத்தீட்டப்படும் என கூறினார்.

    Next Story
    ×