search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த சூ கியுக்கு கடைசி வாய்ப்பு - ஐ.நா. பொதுச்செயலாளர்
    X

    ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த சூ கியுக்கு கடைசி வாய்ப்பு - ஐ.நா. பொதுச்செயலாளர்

    ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த மியான்மரின் நடைமுறைத்தலைவர் ஆங் சான் சூகியிக்கு இதுவே கடைசி வாய்ப்பு என ஐ.நா. பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
    நியூயார்க்:

    மியான்மரில் போலீஸ் படையினர் மீது கடந்த மாதம் 25-ந் தேதி ரோஹிங்யா முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் (அர்சா) தாக்குதல் நடத்தி, 12 பேரை கொன்றனர். அதைத் தொடர்ந்து, ராக்கின் மாகாணத்தில் இருந்து வந்த அந்த இன மக்கள் மீது ராணுவமும், புத்த மதத்தினரும் தாக்குதல் நடத்தினர்.

    அதைத் தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக சுமார் 4 லட்சம் ரோஹிங்யா முஸ்லீம்கள் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அங்கு சென்றுள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் இல்லங்கள் தவிர்த்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வங்காளதேச போலீசார் அறிவித்துள்ளனர். ரோஹிங்கியா முஸ்லீம்களை வாகனங்களில் வெளியிடங்களுக்கு ஏற்றிச்செல்லக்கூடாது என வாகன உரிமையாளர்களுக்கும், டிரைவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாடகைக்கு கட்டிடங்களை விடக்கூடாது எனவும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து பேசிய ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், “பல லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மியான்மரை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்துள்ள ராணுவ தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு மியான்மரின் நடைமுறைத்தலைவர் ஆங் சான் சூகியிக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என எச்சரித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, “இப்போதைய நிலைமையை அவர் மாற்றாவிட்டால், அங்கு நடக்கப்போகிற சோகம் மிகவும் பயங்கரமானதாகி விடும். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×