search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை இடைமறித்த சீன ஜெட் விமானங்கள்
    X

    அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை இடைமறித்த சீன ஜெட் விமானங்கள்

    கிழக்கு சீன கடல் எல்லைக்குள் பறந்த அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை 2 சீன போர் விமானங்கள் இடைமறித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
    வாஷிங்டன்:

    தென் சீனக் கடலில் தன்னுடய உரிமையை நிலைநாட்ட சீன முயற்சி செய்து வருகிறது. இதனிடையே, தென் சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் அமெரிக்க விமானம் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், கிழக்கு சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை சீன ஜெட் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் இபி-3 விமானத்திற்கு மிக நெருக்கமாக சீனாவின் ஜே-10 விமானம் வந்ததாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீன விமானம் நெருங்கி வந்ததை அடுத்து அமெரிக்க விமானம் தனது பாதையை மாற்றி சென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, இதேபோல் தென் சீன கடலில் கதிர்வீச்சைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை சீன ஜெட் விமானங்கள் கடந்த மே மாதம் இடைமறித்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×