search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் பங்குதாரர்களை ஏமாற்றி 5 கோடி டாலர் மோசடி: இந்திய வம்சாவளி டாக்டருக்கு 10 ஆண்டு சிறை
    X

    அமெரிக்காவில் பங்குதாரர்களை ஏமாற்றி 5 கோடி டாலர் மோசடி: இந்திய வம்சாவளி டாக்டருக்கு 10 ஆண்டு சிறை

    அமெரிக்காவில் பங்குதாரர்களை ஏமாற்றி சுமார் 5 கோடி டாலர் மோசடி செய்த பிரபல இந்திய வம்சாவளி டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர் போட்ரசு(51). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கண் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, இவர் முன்னர் வேலை செய்த ‘விடல் ஸ்பிரிங்’ என்ற நிறுவனத்துக்காக போலியான இமெயில், மோசடி செய்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை, மொபைல் வங்கி விவரங்கள் மற்றும் வரி கட்டிய போலி ரசீதுகளை தயார் செய்தது நிரூபணமானது.

    உதாரணமாக, ஸ்ரீதர் போட்ரசு கடந்த 2014-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் 1.29 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக மோசடி செய்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்கள் பலர் வாங்கி குவித்தனர்.

    ஆனால், 2013-ஆம் நிதியாண்டில் வெறும் 10 லட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் அந்த நிறுவனம் வீழ்ச்சி அடைந்து பங்குகள் சரிந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

    இதேபோல், அரசுக்கு வரி கட்டாமல் சுமார் 7.5 லட்சம் டாலர்களை ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக அவர்மீது அமெரிக்க நீதிமன்றத்தில்
    நிதிமோசடி வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சுமார் 5 கோடி அமெரிக்க டாலர் பண மோசடி செய்தது நிரூபணம் ஆனதால், ஸ்ரீதர் போட்ரசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தண்டனைக்குள்ளான ஸ்ரீதர் போட்ரஸ், அமெரிக்காவில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சியான ஜெய் ஹோ உள்பட பல்வேறு முக்கிய விழாக்களில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×