search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: அதிபர் கிம் ஜான்-யுன் பாராட்டு
    X

    வடகொரியாவின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி: அதிபர் கிம் ஜான்-யுன் பாராட்டு

    வடகொரியா நடத்திய குறைந்த அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
    பியாங்யாங்:

    சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய 
    யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.

    இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த அளவில் செல்லும் ஏவுகணையை நேற்று சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்து இருந்தது.  

    தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென் கொரியா 
    பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.



    வடகொரியா நடத்திய குறைந்த அளவிலான தூரம் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சோதனை செய்யப்பட்ட ஏவுகணை ராணுவ பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜான் யுன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×