search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
    X

    அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

    அமெரிக்காவில் ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மரண தண்டனை வி‌ஷ ஊசி போட்டு நிறைவேற்றப்படுகிறது. அத்தகைய தண்டனை ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தெற்கு மாகாணமான ஆர்கன்சாசில் ஒரே நாள் இரவில் 2 பேருக்கு வி‌ஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களது பெயர் ஜாக் ஜோன்ஸ், மார்சல் வில்லியம்ஸ்.

    இவர்கள் 2 பேருக்கும் 1990-ம் ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மேல் முறையீடு செய்து இருந்ததால் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.



    தற்போது அவர்களின் மேல்முறையீடு மனு சுப்ரீம் கோர்ட்டினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து வி‌ஷ ஊசி போட்டு கொல்லப்பட்டனர்.

    ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஆர்கன்சாஸ் மாகாணத்தில் 8 கைதிகளுக்கு 11 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், 2 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நீண்ட நாள் காத்திருப்பு குற்றவாளிகள் என்பதால் உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×