search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் பதவி விலகிய 3 மாதங்களுக்கு பின் பொதுமக்கள் மத்தியில் தோன்றிய ஒபாமா
    X

    அதிபர் பதவி விலகிய 3 மாதங்களுக்கு பின் பொதுமக்கள் மத்தியில் தோன்றிய ஒபாமா

    அதிபர் பதவி விலகிய 3 மாதங்களுக்கு பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடந்தவிழாவில் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது தனது மவுனத்தை கலைத்து உயர் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    சிகாகோ:

    அமெரிக்க அதிபராக ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தார். தற்போது பதவி விலகிய அவர் தனது சொந்த ஊரான சிகாகோவில் தங்கியுள்ளார்.

    புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி விலகிய அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் பொதுமக்கள் மத்தியில் தோன்றி வாய் திறக்கவில்லை.

    தனது செய்தியாளர் மூலம் டுவிட்டரில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பதவி விலகிய 3 மாதங்களுக்கு பிறகு சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடந்தவிழாவில் அவர் கலந்து கொண்டார்.

    அப்போது தனது மவுனத்தை கலைத்து உயர் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது நம்பிக்கை தளராது எதிர்காலத்தை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை குறித்தும், பிரச்சினைகள் பற்றியும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் பேசினார்.


    மேலும் அமெரிக்காவுக்கு அடுத்த தலைமுறைக்கு புதிய தலைவர்களை உருவாக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

    தனது பேச்சின் போது தற்போதைய அதிபர் டிரம்ப் குறித்து ஒபாமா எதுவும் பேசவில்லை. அவர் குறித்து ஒபாமாவிடம் மாணவர்களும், நிருபர்களும் கேள்வி எழுப்பவில்லை.

    Next Story
    ×