search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம்: 5 இளம் விளையாட்டு வீரர்கள் கைது
    X

    பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷம்: 5 இளம் விளையாட்டு வீரர்கள் கைது

    பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய 5 இளம் விளையாட்டு வீரர்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் பிரதமருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிய 5 விளையாட்டு வீரர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

    பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடைபெற்ற ஆண்டு விளையாட்டு நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக "போ நவாஸ் போ" என்ற கோஷங்களை எழுப்பியதாக 5 இளம் வீரர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். லாகூரில் உள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நாட்டு ரயில்வேதுறை அமைச்சர் கவாஜா சாது ரபிஃக் பங்கேற்று உரையாற்றினார். இதில் கஜாஜாவின் உரையின் போது 5 பேரும் நவாசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதையடுத்து கோஷங்களை நிறுத்தச் சொல்லி கவாஜா ரயில்வே போலீசாருக்கு உத்தரவு போட்டார். ஆனால் ஐவரும் கோஷங்களை நிறுத்தாததால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்த காரணத்தை விசாரித்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்கான காரணம் குறித்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் ரயில்வே செய்தித்தொடர்பாளர் நஜம் வாலி தெரிவித்தார். ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்ட இரண்டாவது நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது கவனிக்க வேண்டியது. 
    Next Story
    ×