search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    ரஷியாவில் தாக்குதலுக்கு திட்டமிட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    ரஷியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாத முகாமில் பயிற்சி மேற்கொண்டவர் உள்பட இரண்டு பேர் தீவிரவாத தடுப்புக்குழுவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
    ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு அமைப்பு ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மனித வெடிகுண்டு, கத்தியால் தாக்கி கொலை செய்தல், துப்பாக்கிச்சூடு என பல வடிவங்களில் தங்களது தாக்குதலை தொடர்கின்றனர். இதனால் ரஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டுகளின் தீவிரவாத தடுப்புக்குழு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், ரஷ்யாவின் தெற்கு ஸ்டாவ்ரோபோல் மாகாணத்தில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் காரில் வந்துள்ளனர். அவர்களை தீவிரவாத தடுப்புக்குழு போலீசார் தடுத்து நிறுத்தியபோது, காரில் இருந்து கொண்டு இருவரும் நவீன துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் எதிர்தாக்குதல் நடத்தி இருவரையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவன் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத முகாமில் பயிற்சி பெற்றவன் என்றும், மற்றொருவன் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் உள்ளவன் என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.

    மத தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை கொல்வது உள்ளிட்ட பல்வேறு தாக்குதலில் ஈடுபட இரண்டு தீவிரவாதிகளும் திட்டமிட்டிருந்ததாகவும் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×