search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் பலி
    X

    தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ஆப்கன் வீரர்கள் பலி

    ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார்-ஐ-சரீப் நகரத்தில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆப்கான் வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    அமெரிக்க தலைமையும், நேட்டோ படைப்பிரிவின் உதவி ஆணையருமான ஜான் நிக்கோல்சன் இந்த தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மற்றும் சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 209-வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    இந்த தாக்குதல் குறித்து ஆப்கன் கமாண்டோ கூறியதாவது, தலீபான்களின் இந்த தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். ஆப்கன் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தவ்லாத் வசிரி கூறும்போது, ஆப்கன் வீரரின் ஆடையை உடுத்திக் கொண்டு வந்த தீவிரவாதி, இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரிவித்தார்.

    10 பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் தாக்குதலின் போது உயிரிழந்ததாகவும் வசிரி தெரிவித்தார். மீதமுள்ள 3 பேரில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒருவரை மட்டும் ராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.



    இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுள்ளனர். அதற்காக ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆம்புலன்சுகள் தீவிரவமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×