search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் விமர்சனம்: தென் ஆப்பிரிக்கரின் சிறை தண்டனை சஸ்பெண்ட்
    X

    தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் விமர்சனம்: தென் ஆப்பிரிக்கரின் சிறை தண்டனை சஸ்பெண்ட்

    தீபாவளி பண்டிகை குறித்து புண்படுத்தும் வகையில் விமர்சனம் செய்த தென் ஆப்பிரிக்கருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
    ஜோகன்ஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் டாவி க்ரில்(59). கடந்த ஆண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தத்தால் கோபமடைந்தது தனது பேஸ்புக்கில் மோசமான விமர்சனத்தை பதிவு செய்திருந்தார்.

    அவர் தமது பதிவில், “மதத்தின் பெயரால் பட்டாசுகளை வாங்கும் சாத்தான் வழிபாட்டாளர்கள் மற்றும் சாத்தான் சீடர்கள் உங்கள் இந்திய பாசியில் உள்ள இருண்ட துளைக்கே திரும்பி செல்லுங்கள்” என்று காரசாரமாக விமர்சனம் செய்து இருந்தார். இவரது கருத்துக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த கருத்தினை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு கடந்த ஒரு வருடமாக தென் ஆப்பிரிக்கா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் கருத்து பதிவு செய்த குற்றத்திற்காக 12 மாத சிறை தண்டனை அல்லது 460 டாலர் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இருப்பினும் தண்டனையை 5 வருட காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார். இதுபோன்ற தவறுகளை இனிமேல் செய்யாமல் இருக்க வேண்டும். முதல்முறை குற்றம் புரிந்து இருப்பதால் அவரை சிறைக்கு அனுப்புவது நோக்கம் அல்ல என்று நீதிபதி கூறினார்.
    Next Story
    ×