search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்
    X

    இங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்

    இங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 15 வருடங்களில் அங்கு 1 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லண்டன்:

    சர்வதேச அளவில் எங்கும் எதிலும் ‘ரோபோக்கள்’ என்ற நிலை வந்து விட்டது. அனைத்து துறைகளிலும் நுழைந்துள்ள ‘ரோபோ’ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகிறான்.

    இத்தகைய போக்கு எதிர் காலத்தில் மனிதர்களின் வேலைக்கு ஆபத்தாக முடியும் நிலை உள்ளது. இங்கிலாந்தை பொறுத்த வரை 30 சதவீதம் பணிகளை ‘ரோபோ’க்கள் செய்து வருகின்றன.

    இவற்றின் செயல்பாடுகளால் இன்னும் 15 வருடங்களில் அங்கு 1 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுவிதமான அதி நவீன தொழில்நுட்ப ‘ரோபோ’க்கள் உருவாகி வருகின்றன. அவை தொழிலாளிகளின் பணியிடங்களை பறிக்கும் அபாயம் உள்ளதாக பி.டபிள்யூ.சி. என்ற ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்தில் 22 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ‘ரோபோ’க்கள் வருகையால் அவற்றில் 10 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்கள் ஆபத்தான கால கட்டத்தில் உள்ளன. எனவே எதிர்காலத்தில் இவற்றை ‘ரோபோ’கள்கள் ஆக்கிரமிக்கும் நிலை உள்ளதாக உறுதிபடக் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×