search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
    X

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

    5 மாநில தேர்தலில் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டி இருந்தனர். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இந்த புகார்களுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது.

    இந்த புகார் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தை வெளிநாட்டு ஆய்வாளர்களை கொண்டு சோதனை செய்ய வேண்டும், நம்பகத்தன்மை பற்றி சோதனை நடத்த வேண்டும் என்று தனது மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.



    இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் சந்திரசந்த் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 5 மாநில தேர்தலில் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×