search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு
    X

    லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

    லண்டன் பாராளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதி ஒருவன் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது காரை மோதிவிட்டு, போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்றான். அந்த தீவிரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி, தீவிரவாதி உட்பட 5 பேர் பலியாகினர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 பேரை லண்டன் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.



    இந்த நிலையில், லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “லண்டன் பாராளுமன்றத்துக்கு அருகில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த வீரர் தான் காரணம்” என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×