search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு சூடான் விமான விபத்தில் 44 பயணிகளும் உயிர் பிழைத்த அதிசயம்!
    X

    தெற்கு சூடான் விமான விபத்தில் 44 பயணிகளும் உயிர் பிழைத்த அதிசயம்!

    தெற்கு சூடானில் 44 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம், திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 44 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜூபா:

    தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    தெற்கு சூடானில் வடமேற்கு பகுதியில் உள்ள வாவு விமான நிலையத்தில் இந்த சம்பவத்தில் நடைபெற்றது. விமானம் தலைநகர் ஜூபாவில் இருந்து வாவு நகருக்கு வந்தது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் அடெனி கூறினார்.

    விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டதால் விமானத்தில் இருந்த 44 பயணிகளும், விமான ஊழியர்களும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.

    விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் அதிரடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விமானத்தில் 41 பெரியவர்களும், 3 சிறியவர்களும் இருந்தனர். அதேபோல், விமானக் குழுவைச் சேர்ந்த 5 பேரும் இருந்தனர். அதில் பலத்த காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×