search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டை சுரண்டிய ஊழல்: மக்களிடம் மன்னிப்பு கேட்ட தென் கொரியா அதிபர் பார்க்
    X

    நாட்டை சுரண்டிய ஊழல்: மக்களிடம் மன்னிப்பு கேட்ட தென் கொரியா அதிபர் பார்க்

    ஊழல் குற்றச்சாட்டுகளால் தென் கொரியா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பார்க் கியூன் ஹே அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் முன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
    சியோல்:

    தென்கொரியாவில் அதிபர் பார்க் கியூன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

    மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

    இதையடுத்து, கடந்த மாதம் முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார்.  மேலும், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஆண்டில் நடைபெற்றது.

    இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு இம்மாதம் பத்தாம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.



    இந்நிலையில், பார்க் கியூன் ஹே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அந்நாட்டின் லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    அதன்படி, சியோல் நகரில் உள்ள லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பக அலுவலகத்தில் அவர் ஆஜரானார். சுமார் பத்து நாட்களுக்கு பின்னர் பொது மக்களிடையே தோன்றும் முன்னாள் அதிபரை காண அவரது ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

    நிதிமன்ற வளாகத்தின் பத்தாவது மாடியில் இருந்த அறையில் விசாரணை அதிகாரிகள் மற்றும் தென் கொரியா அரசின் தலைமை வக்கீலின் கேள்விகளுக்கு பதிலளித்த பார்க், அந்த காட்சியை வீடியோ படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

    முதல்நாள் விசாரணை முடிந்து கீழே இறங்கி வந்த பார்க், மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேம். நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு நேர்மையான முறையில் ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்று குறிப்பிட்டார்.


    Next Story
    ×