search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை படம் எடுத்து மிரட்டிய மாணவன்
    X

    டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை படம் எடுத்து மிரட்டிய மாணவன்

    அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.
    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பெண் பேராசிரியர் பேசியதை ஒரு மாணவன் வீடியோ எடுத்துள்ளான்.

    உளவியல் பேராசிரியரான ஒல்கா பெர்ஸ் டிரம்ப் மேலாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுகிறார் என்று விமர்சித்தார். ஓ’நெயில் என்ற அந்த மாணவன் தான் எடுத்த அந்த வீடியோவை கொண்டு பேராசிரியரை மிரட்டி உள்ளான்.

    முன்னதாக, 19 வயதான நெயில் டிரம்ப் ஆதரவாளராக உள்ளான். அவன் தான் எடுத்த வீடியோவை கல்லூரியில் உள்ள குடியரசு குழுவினரிடம் காட்டியுள்ளான். அவர்கள் பேராசிரியர் பெர்ஸ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.



    பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் விரிவுரையாளர் இணையதள பகுதியில் பதிவிட்டனர். இதனால் கல்லூரியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த மாணவனை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது.
    Next Story
    ×