search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்காவிலும் வெளிநாட்டவர்களின் கடைகள் மீது இனவெறித் தாக்குதல்
    X

    தென் ஆப்பிரிக்காவிலும் வெளிநாட்டவர்களின் கடைகள் மீது இனவெறித் தாக்குதல்

    அமெரிக்காவில் இனவெறித் தாக்குதலுக்கு இந்தியர் பலியானதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க நாட்டிலும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களின் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    கேப்டவுன்:

    அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இன்று அமெரிக்கர் ஒருவர் ‘எங்கள் நாட்டிலிருந்து வெளியேறு’ என்று கூறி இனவெறியுடன் இந்திய இஞ்சினியரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதே போல தென் ஆப்பிரிக்க நாட்டிலும் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.



    தென் ஆப்பிரிக்காவில் இன்று நைஜீரியா, ஜிம்பாப்வே, சோமாலியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களின் குடியிருப்புகள், கடைகளை சில கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியுள்ளது. மேலும், சாலைகளிலும் தெருக்களிலும் டயர்கள் எரிக்கப்பட்டு அகதிகள், அயல்நாட்டு குடியேறிகளுக்கு எதிராக கோஷங்களும் போராட்டங்களும் வெடித்தன.

    வெளிநாட்டினருக்கு எதிரான இந்த வெறுப்பு மனநிலையை கண்டித்துள்ள அதிபர் ஸூமா, “தென் ஆப்பிரிக்கர்கள் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தகக்து, நம் நாட்டின் பரவலான குற்றப்பிரச்சினைகளுக்கு அயல்நாட்டினரை பலிகடாவாக்குவது நியாயமற்றது, உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டுபிடித்து தண்டிக்கும்” எனக் கூறினார்.

    தென் ஆப்பிரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் அதிகரித்து வருவதால் அங்கு வெளிநாட்டினர் மீது சமீப ஆண்டுகளில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×