search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை கண்டுபிடிப்பு
    X

    சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை கண்டுபிடிப்பு

    சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    அன்சீன் என்னும் நிறுவனத்தை சேர்ந்த லாரன் பவ்கர் என்பவர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.பயர்(fire) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஹேர் டை தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மை கொண்டது.அடர்சிவப்பு தொடங்கி பல்வேறு நுண்ணிய நிறங்களில் இந்த ஹேர் டை கிடைக்கிறது.

    லண்டன் பேஷன் வீக்கில் இந்த ஹேர் டையை அறிமுகப்படுத்த லாரன் பவ்கர் திட்டமிட்டுள்ளார். சிலமுறை அலசினாலே கூந்தல் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் இந்த ஹேர் டையை பயன்படுத்தும்போது பயம் கொள்ளத் தேவையில்லை.



    எனினும், இந்த டையை சந்தைக்குக் கொண்டுவர தொழில் பங்குதாரர்கள் யாரும் லாரன் பவ்கருக்கு கிடைக்கவில்லை. அதனால் இந்த ஹேர் டையைப் பயன்படுத்த நாம் சிலகாலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×