search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் கார் குண்டு தாக்குதலுக்கு 40 பேர் பலி
    X

    சிரியாவில் கார் குண்டு தாக்குதலுக்கு 40 பேர் பலி

    சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 30-க்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் உள்ளூர் போராளி குழுக்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக அந்நாட்டு அரசுப் படைகள் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றன. எதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை ராணுவம் மீட்டு வருகிறது.

    இதற்கிடையே, துருக்கி நாட்டை சேர்ந்த புரட்சிப்படையினரும் சிரியாவில் இருந்து  ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டி அடிக்கும் நோக்கத்தில் போர் நடத்தி வருகிறார்கள். இருதரப்பினருக்கும் இடையில் கடந்த ஒருவார காலமாக நடைபெற்ற ஆவேசப் போரின் எதிரொலியாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அல்-பாப் மாநிலத்தில் இருந்து தீவிரவாதிகள் விரட்டி அடிக்கப்பட்டனர். அருகாமையில் உள்ள காபாசின், அல் பேஸா ஆகிய நகரங்களும் கைப்பற்றப்பட்டன.

    அல்-பாப் நகரம்

    இந்நிலையில், அல்-பாப் மாநிலத்தின் மேற்கு பகுதியான சோசியான் என்ற கிராமத்தில் துருக்கி நாட்டை சேர்ந்த ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்த ராணுவ நிலையத்தின் மீது இன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 40-க்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×