search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் விமான நிலையம் மீட்பு
    X

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் விமான நிலையம் மீட்பு

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் விமான நிலையத்தை ஈராக் அரசு ராணுவம் மீட்டது. பின்னர் அங்கு ஈராக் தேசிய கொடியை ஏற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
    மொசூல்:

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஆதரவு படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்டு வருகிறது.

    ஈராக் நாட்டின் 2-வது பெரிய நகரான மொசூல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த மாதம் அதன் கிழக்கு பகுதியை ஈராக் அரசு ராணுவம் கடும் சண்டையின் மூலம் மீட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தை மீட்க அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இருந்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் பதிலடி தொடுத்தனர். ராணுவத்தின் மீது தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள்.

    4 மணி நேர சண்டைக்கு பிறகு மொசூல் விமான நிலையத்தை ராணுவம் மீட்டது. அங்கிருந்த தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈராக் ராணுவ வீரர்கள் விமான நிலையத்தை சுற்றி நின்று தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.


    பின்னர் அங்கு ஈராக் தேசிய கொடியை ஏற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். முன்னதான விமான நிலையத்தின் ஓடு தளங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வீசி தகர்த்து ராணுவ வீரர்களுக்கு தடை ஏற்படுத்தினர்.
    Next Story
    ×