search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலுக்கு அடியில் புதிய கண்டம் கண்டுபிடிப்பு
    X

    கடலுக்கு அடியில் புதிய கண்டம் கண்டுபிடிப்பு

    கடலுக்கு அடியில் ஷிலாண்டியா என்ற புதிய கண்டம் கண்டு பிடிக்கப்பட்டது. இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

    சிட்னி:

    உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என 6 கண்டங்கள் உள்ளன. தற்போது புதிதாக ஒரு கண்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    இது தென்பசிபிக் கடலுக்கு அடியில் உள்ளது. அதாவது தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய கண்டத்துக்கு ‘ஷிலாண்டியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அண்டை கண்டமான ஆஸ்தி ரேலியாவின் மூன்றில் 2 மடங்கு அளவு கொண்டது.

    அதாவது 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஷிலாண்டியா கண்டம் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கிறது. அதன் அளவு 94 சதவீதம் என கணக் கிடப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்தை போன்று 3 மடங்கு பெரியது என்றும் விஞ்ஞானிகள் கூறு கின்றனர்.

    புவியியல் அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற் கொண்டுள்ளனர். இப்புதிய கண்டம் உருவானது எப்படி என்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் இத்தகவல் அமெரிக்க ஆராய்ச்சியியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×